|
|
 |
PJMIXPJ.PAGE.TL
தீபாவளிக்கு அதிக காட்சிகள் அரசு அனுமதி
pj on 11/07/2007 at 6:17am (UTC) | |

இரண்டு நாள் கழிந்தால் திபாவளி. திரையரங்கில் குவியும் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று நகம் கடித்து யோசிக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
தீபாவளிக்கு முன்பே அரசு சார்பில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. இனிப்பு என்றால் இனிப்பான செய்தி!
தீபாவளியையொட்டி ஏழு நாட்கள் ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதித்துள்ளது. தீபாவளி தினமான எட்டாம் தேதியிலிருந்து பதினான்காம் தேதிவரை மொத்தம் ஏழு நாட்கள், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று ஐந்து காட்சிகள் திரையரங்குகளில் திரையிடலாம்.
கிராமங்களில் இருக்கும் டூரிங் திரையரங்குகள் மேட்னி ஷோ நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் திரையரங்கு உரிமையாளர்கள் இந்தமுறை ரசிகர் மன்றத்தினருக்கு ஷோ நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். மன்றத்தினருக்கென்று கொடுக்கப்படும் டிக்கெட்டுகளை அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதே காரணம் ஆக, விஜய், சூர்யா, தனுஷ்... யாருடைய ரசிகராக இருந்தாலும் கவுண்டரில் நின்றால்தான் டிக்கெட்!
நல்ல முடிவு, வரவேற்போம்!
| | |
|
விஜய் படத்தில் ரஜினிபட வில்லன்!
pj on 11/07/2007 at 5:54am (UTC) | |

ரஜினியின் 'சிவாஜி' பலருக்கு வாழ்வளித்தது. சிலரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ரஜினி ஜோடி என்ற கோதாவில் விஜய் முதல் விக்ரம் வரை முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயா.
'சிவாஜி'யில் வில்லனாக நடித்த பிறகு நடிகர் சுமனின் கேரியரிலும் பிரகாசம்! வில்லனாக நடிக்கக் கேட்டு வாய்ப்புகள் குவிகிறது.
விஜய் நடிக்க தரணி இயக்கும் 'குருவி' படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்தது. அவர் பிஸியாக இருப்பதால் நடிக்க முடியாத நிலை. இதனால் சுமன் 'குருவி'யில் வில்லனாக நடிக்கிறார்.
'சிவாஜி'யில் நடித்த ஸ்ரேயாவை 'அழகிய தமிழ்மகனில்' தனது ஜோடியாக்கிக் கொண்டார் விஜய். இப்போது 'சிவாஜி' பட வில்லன்.
| | |
|
மம்முட்டி-அர்ஜீனின் அதிரடியில் 'அறுவடை'
pj on 08/15/2007 at 5:06pm (UTC) | |

தேசிய அளவிலான பிரச்சனைக்கு தீர்வு சொல்ல புறப்பட்டுவிட்டது 'அறுவடை' டீம். "இந்த அறுவடை, கதிர்களை அல்ல பதர்களை" என படத்திற்கு அழகான கேப்சன் சொல்கிறார் தயாரிப்பாளர் ஹென்றி.
தேசிய அளவிலான பிரச்சனைக்கு தீர்வு சொல்ல புறப்பட்டுவிட்டது 'அறுவடை' டீம். "இந்த அறுவடை, கதிர்களை அல்ல பதர்களை" என படத்திற்கு அழகான கேப்சன் சொல்கிறார் தயாரிப்பாளர் ஹென்றி.
மறப்போர் செய்யும் அர்ஜீனனாக அர்ஜீனும் அறப்போர் செய்யும் கிருஷ்ணனாக மம்முட்டியும் இணைந்து நடத்தவுள்ள இந்த அறுவடையில் புலனாய்வு துறை அதிகாரி வேடம் மம்முட்டிக்கு. மாநில காவல்துறையின் ஸ்பெஷல் பிராஞ்ச் அதிகாரியாக அர்ஜீன் நடிக்கிறார். ASP யாக ஜெய்ஆகாஷ் நடிக்கிறார்.
ஹீரோக்களுக்கான ஜோடி புறாக்களும் உண்டு. வெறும் கனவு பாடலுடன் காணாமல் போகாமல் கதைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மம்முட்டிக்கு ஜோடியாக வரும் சினேகா பைலட்டாகவும், அர்ஜீனின் காதலியாக வரும் மம்தா பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளராகவும் நடிக்கின்றனர். காமெடியில் கலக்க ஜெகதீஷ், வில்லனாக மிரட்ட தீபக்ஜேடியும் இடம் பெறுகின்றனர்.
"வறட்சிக்கு சாவுமணி அடித்து, விவசாயிகளுக்கு ஜீவமணி ஒலிக்க வைப்பதே அறுவடையின் நோக்கம்" என்னும் தயாரிப்பாளர் ஹென்றி, இதில் திரைக்கதையாசிரியராகவும் தன்னை அடையாளம் காட்டுகிறாராம். படத்தை இயக்குவது அரவிந்த். வித்தியாசாகர் இசையில் வைரமுத்து, பா. விஜய், யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர்.
அர்ஜீன் படங்களிலேயே மிகப் பிரம்மாண்டமான செலவு இந்த படத்திற்காகதான் செய்யப்பட்டுள்ளதாம். சென்னையின் பழைய மத்திய சிறைச்சாலையில் 14 லட்சம் ரூபாய் செலவில் செட் போட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர இருபது வருடங்களுக்குபிறகு நாட்டில் என்னவிதமான மாற்றங்கள் இருக்குமோ அதுபோன்ற செட் போடப்பட்டு படமாக்கப்படவுள்ளதாம். இதற்கான பட்ஜெட் மட்டும் 30 லட்சம் ரூபாய். இதுவரை எந்த இந்திய திரைப்படங்களிலும் இல்லாத அளவில் சண்டைகாட்சிகள் படமாக்கபடவுள்ளதாம். அர்ஜீன் - மம்தா பங்குபெறும் ஒரு பாடல்காட்சி மட்டும் வெளிநாடுகளில் படமாகவுள்ளது.
சென்னை, கொச்சின், மார்த்தாண்டம், தேங்காபட்டணம், கன்னியாகுமரி, இளையான்குடி உள்ளிட்ட பலதரப்பட்ட இடங்களை பதிவு செய்ய போகிறது ராஜேஷ்யாதவின் காமிரா. டி.ஐ, கிராபிக்ஸ், 3டி உள்பட நவீன தொழில்நுட்பங்களும் அறுவடையை அழகூட்டவுள்ளது.
| | |
|
விஜய்யின் புதிய படம் 'குருவி'
pj on 08/15/2007 at 4:59pm (UTC) | |

நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு 'குருவி' என பெயர் வைத்துள்ளனர் | | |
|
பிச்சைக்காரர்களுக்கு 'கடவுள்'
pl on 08/01/2007 at 9:32am (UTC) | |

இது என்னவோ 'ஹாரிபாட்டர்' படத்தில் வரும் கற்பனை காட்சிகளோ, வானத்திலிருந்து தேவன் தோன்றி வரமளித்த அற்புதமோ அல்ல. 'நான் கடவுள்' படத்தில் நடக்கும் நிஜம்.
சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் பாலா இயக்கிவரும் படம் 'நான் கடவுள்.' வாரணாசியில் முதல்கட்ட படப்பிடிப்புடன் ஸ்லோமோஷனான படப்பிடிப்பு பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடக்கும் லொகேஷன் தேனியில் உள்ள கும்பக்கரை அருவி.
கும்பக்கரை அருகே தென்கரை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சாமியார்களும் பிச்சைக்காரர்களும் நடமாடுவது போன்ற காட்சிகள் படமாக்கபட்டு வருகிறது. இதற்காக சென்னையிலிருந்து துணை நடிகர்களையெல்லாம் கொண்டு போகாமல் ஒரிஜினல் பிச்சைக்காரர்களையே நடிக்க வைத்து வருகிறார் பாலா.
தெருக்களில் சில்லரை காசுகளாக கலெக்ஷ்ன் செய்துவந்த பிச்சைக்காரர்களுக்கு நடிப்பதற்கான சம்பளமாக 2500 ரூபாய் சுளையாக தரப்படுகிறதாம். இதுதவிர மூன்றுவேளை வயிறாற சாப்பாடும், இடைபட்ட நேரங்களில் டீ காபி ஸ்நாக்ஸும் வழங்கப்படுகிறதாம்.
பாலா ஸ்பாட்டுக்கு வரும்போதெல்லாம் "நீங்க நல்லா இருக்கணும் சாமி....." என இயக்குனரை கடவுளாக நினைத்து கோரஸாக குரலெழுப்பி கும்பிடு போடுகின்றனராம் பிச்சைக்காரர்கள்.
அடையாளம் தெரியாமல் ஆர்யாவுக்கும் 2500 சம்பளம் தந்து அனுப்பிடாம இருந்தா சரி.
| | |
|
டைரக்ஷ்ன்தான் என்னோட குறி
pj on 08/01/2007 at 9:30am (UTC) | |

பானுமதி, ரேவதி, சுஹாசினி வரிசையில் விரைவில் இன்னொரு நடிகையையும் இத்திரையுலகம் டைரக்டராக பார்க்கப்போகிறது.
தொண்ணூறுகளில் நடிகையாக அறிமுகமானவர் ரஞ்சிதா. கார்த்திக், அர்ஜீன், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் டூயட் ஆடி வந்த ரஞ்சிதாவுக்கு வாய்ப்புகள் வற்றிபோகவே அம்மா, அக்கா வேடத்திற்கு தாவினார்.
கடந்த வருடம் திடீரென்று இயக்குனராகப்போகிறேன் என 'ஷாக்' கொடுத்த ரஞ்சிதா, அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். முதல் டார்கெட் பாலிவுட்தான். ப்ரீத்தி ஜிந்தா கதாநாயகியாக நடிக்கும் ஒரு படத்தைத இயக்க திட்டமிட்ட ரஞ்சிதாவின் முயற்சி பாதியிலேயே நின்றுபோனது.
இந்நிலையில் தெலுங்கு படமொன்றில் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார் ரஞ்சிதா. இதுபற்றி ரஞ்சிதாவே கூறுகிறார்.
"நான் நடிக்க வந்த 15 வருட காலத்தில் தென்னிந்திய மொழிகளில் 90 படங்களில் நடித்துவிட்டேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நான் ஆர்வம் காட்டியது இலக்கியத்தில்தான். அதுதான் எனக்குள் டைரக்ஷ்ன் ஆசையை தூண்டியது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.
இப்போது தெலுங்கு இயக்குனர் பூரிஜெகன் இயக்கப்போகும் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளேன். இந்த படத்தில் பிரபாஸ், த்ரிஷா நடிக்கின்றனர். இன்னும் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு தனியாக ஒரு படத்தை இயக்குவேன். டைரக்ஷ்ன்தான் என்னோட லட்சியம்".
வாழ்த்துக்கள் ரஞ்சிதா!
| | |
|
|
|
 |
|
|
|
|
01 ஏகன்
02 சேவல்
03 ச-ரோ-ஜா
04 காதலில் விழுந்தேன்
05 சக்கரகட்டி
06 ஜெயம்கொண்டான்
07 பொய் சொல்லப் போறோம்
08 ராமன் தேடிய சீதை
09 துரை
10 தாம் தூம் |
|
01 ஹே சால... -ஏகன்
02 டாக்சி டாக்சி... -சக்கரகட்டி
03 கண்ணம்மா...- சேவல்
04 சஹியே... -தாம் தூம்
05 தோஸ்த் படா... -ச-ரோ-ஜா
06 நான்... -ஜெயம் கொண்டான்
07 மதுர குலு...-சுப்ரமணியபுரம்
08 உலகநாயகனே.... -தசாவதாரம்
09 சுராங்கனி.... -பந்தயம்
10 மழை நின்றா... -ராமன் தேடிய சீதை |
|
|
|
 |
|
|
|
|