|
|
 |
PJMIXPJ.PAGE.TL
கேன்ஸில் அஜித் படம்
pj on 05/06/2008 at 3:52am (UTC) | |

தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த அஜித் படம் 'பில்லா'.
1980-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'பில்லா'வின் ரீ-மேக்கான இது, அதன் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற புதிய 'பில்லா' உலக ரசிகர்களின் பாரவைக்கு செல்கிறது.
பிரான்ஸில் வருடம்தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட 'பில்லா' தேர்வாகியுள்ளது. இதற்குமுன் 'வெயில்', 'மொழி', 'பருத்திவீரன்' படங்களுக்கு இந்த கவுரவம் கிடைத்தது. அஜித் படமொன்று கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்படுவது இதுவே முதன்முறை.
இந்த மாதம் பதினெட்டாம் தேதி கேன்ஸில் 'பில்லா' திரையிடப்படுகிறது. இது போட்டிப் பிரிவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்ஸில் ஒருபடம் திரையிடப்படுவது மிகப்பெரிய கவுரவம். இதனை நேரில் அனுபவிக்க படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கேன்ஸ் செல்ல உள்ளார்.
அஜித் கேன்ஸ் படவிழாவில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பது இன்னும் முடிவாகவில்லை
| | |
|
நான் காதலிக்கிறேன் : மனம் திறந்த விஷால்
pj on 05/05/2008 at 4:59am (UTC) | |

நயன்தாராவை காதலிக்கிறார், ப்ரியாமணியை காதலிக்கிறார் என தன்னைப்பற்றி வந்த காதல் செய்திக்குப்பிறகு வெளிப்படையாக பதிலளிக்கிறார் விஷால்.
ஸ்ரீ லஷ்மி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் டி.அஜய்குமார் தயாரித்த படம் 'மலைக்கோட்டை'. விஷால், பிரியாமணி ஜோடியாக நடிக்க ஜி.பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் 125ம் நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., கே.பாக்யராஜ், பார்த்திபன் முன்னிலை வகித்து படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு கேடயம் பரிசளித்தனர். பின்னர் விஷால் பேசியதாவது:-
"மலைக்கோட்டை படத்தின் ஹீரோ, திரைக்கதை தான். ஒரே படத்தில் 4 ஹீரோயின்களுடன் நடிப்பது சாதாரண விஷயமல்ல. ப்ரியாமணி, ஊர்வசி, நிரோஷா, ரேகா என 4 நாயகிகளுடன் இதில் நடித்தது சந்தோஷம். ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். 'ப்ரியாமணியை காதலிக்கிறீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அவரை காதலிக்கவில்லை. ஒரு பத்திரிகையில் காதலர் தினத்துக்காக செய்தி கேட்டபோது 'யாரையாவது காதலிக்கிறீர்களா?' என்றார்கள். 'ஆம்' என்றேன். யாரை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.
அதற்குள் ப்ரியாமணியை காதலி்க்கிறார். நயன்தாராவை காதலிக்கிறார் என்று எழுதிவிட்டார்கள். நான் காதலிக்கிறேன். ஆனால் ப்ரியாமணியையோ, நயன்தாராவையோ அல்ல. எனக்கு புரட்சி தளபதி என்று ரசிகர்கள் பட்டம் கொடுத்ததை ஏற்றுக்கொண்டேன். ஒரு நடிகருக்கு ரசிகர்கள் தரும் பட்டம் மிக முக்கியம். எந்தவொரு நடிகருக்கும் முதல் 3 நாள் தியேட்டரில் கலெக்ஷ்ன் இருந்தால்தான் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு திருப்தி அடைவார்கள். அந்த கலெக்ஷ்னை என் படத்துக்கு தந்த ரசிகர்களுக்கு நன்றி".
| | |
|
மாதவன் நடிக்கும் 'குரு என் ஆளு'
pj on 05/05/2008 at 4:48am (UTC) | |

திரைக்கதையில் கமர்ஷியல் கபடி ஆடும் வித்தை தெரிந்த இயக்குனர் செல்வா இம்முறை மாதவனுடன் கூட்டு சேர்ந்துள்ளார். ஆனால் மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி கமல் இல்லை. 'சிவப்பதிகாரம்' மம்தா.
'ஆலயதீபம்', 'துடிக்கும் கரங்கள்', 'ஜானி', 'தீர்ப்பு', 'சிவப்பு ரோஜாக்கள்', 'கடல் மீன்கள்', 'மின்சார கண்ணா' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கே.ஆர்.ஜி. இவரது கே.ஆர்.ஜி,மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் 'குரு என் ஆளு' படத்தில்தான் மேற்கண்ட கூட்டணி கைக்கோர்கிறது.
இரண்டாவது கதாநாயகனாக அப்பாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக பிருந்த பராக் நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த்தேவா இசையில் பா.விஜய், பழனிபாரதி, கபிலன் பாடல்களை எழுதுகின்றனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கேரளா, சென்னை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பாடல்காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
| | |
|
அஜித்துக்கு விஜய் விருந்து?
pj on 11/11/2007 at 6:11am (UTC) | |

இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்! மானும் புலியும் ஒரே குட்டையில் நீர் அருந்தினால்கூட இப்படி ஆச்சரியப்படமாட்டார்கள். அந்தளவுக்கு எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டவர்கள் அஜித்தும் விஜய்யும்.
ஒருவர், எவன்டா தல என்று கேட்க, பதிலுக்கு இவர், நண்பனாக இருக்கக்கூட உனக்கு தகுதியில்லை என உறும, அஜித், விஜய் படங்கள் என்றாலே கவுண்டர் டயலாக்தான் என்றொரு நிலைமை இருந்தது. இப்போது கிளீன் சிலேட்! வம்பும் இல்லை தும்பும் இல்லை.
தமிழக அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் அஜித்தும், விஜய்யும் அருகருகே அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது இனிய சர்ப்ரைஸ். அப்போது விஜய் அஜித்தையும், ஷாலினியையும் தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார்.
அந்த அழைப்பை ஏற்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் விஜய் வீட்டிற்கு சென்றதாகவும், விஜய் விருந்து கொடுத்து உபசரித்ததாகவும் சொல்கிறார்கள்.
ஏனிந்த திடீர் பாசம்?
அடுத்த கமல் - ரஜினி இவர்கள் இருவர்தான் என்ற பேச்சு நேற்றுவரை இருந்தது. இன்று அந்த நாற்காலிக்கு விக்ரம், சூர்யா மட்டுமில்லாது விஷால், சிம்பு, ஜீவா என ஏகப்பட்ட போட்டிகள். கொஞ்சம் அசந்தாலும் வாரிசு பதவி பறந்து விடும். போட்டியை சமாளிக்கவும், அடுத்த கமல் -ரஜினி நாங்கதான் என்பதை மெய்ப்பிக்க அவர்களைப் போல் நட்பாக இருக்கவும்தான் இந்த சந்திப்பு, விருந்து எல்லாம் என்கிறார்கள்.
காரணம் எதுவாக இருந்தாலும் நட்பு வளர்ந்தால் அது போதுமே!
| | |
|
முதலிடத்தில் எந்தப் படம் ?
pj on 11/10/2007 at 4:48am (UTC) | |

பி மற்றும் சி சென்டர்களில் விஜய்யின் 'அழகிய தமிழ்மகனு'க்கும், சூர்யாவின் 'வேல்' படத்துக்கும்தான் போட்டி. சென்னையில் மட்டும் வேறு மாதிரி.
தீபாவளியை முன்னிட்டு இன்று இரண்டு மெகா இந்திப் படங்கள் வெளியாகின்றன. ஒன்று, ஷாருக்கானின் 'ஓம் சாந்தி ஓம்.' இன்னொன்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'சாவரியா.
'ஓம் சாந்தி ஓம்' படத்திற்கு அதன் தயாரிப்பாளரான ஷாருக்கானும், 'சாவரியா' வுக்கு அதன் தயாரிப்பு நிறுவனமான சோனியும், விளம்பரத்திற்கு மட்டும் தலா ஐந்து கோடிக்கு மேல் செலவழித்துள்ளார்கள். இப்படங்களின் விளம்பரப் பார்ட்னர்களாக செயல்படும் பான்டலூன்ஸ் போன்ற பத்துக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவு செய்த கோடிகள் தனி.
சென்னையில் 'அழகிய தமிழ்மகன்' படத்துக்கு இணையாக 'ஓம் சாந்தி ஓம்' படத்துக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வசூலில் முந்தப்போவது விஜய்யா ஷாருக்கானா என்பதிலும் போட்டி உள்ளது.
நேற்று வெளியான ஆறு தமிழ்ப் படங்களில் 'அழகிய தமிழ்மகன்', 'வேல்' மற்றும் 'பொல்லாதவன்' படங்கள் நூறுசதவீத வசூலை பெற்றுள்ளன. சரி, எந்தப் படம் டாப்?
அதற்கு ஒருவாரம் காத்திருக்க வேண்டும்
'ஓம் சாந்தி ஓம்', 'சவாரியா' இரண்டும் இந்திப் படங்கள் என்றாலும், இரண்டுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்கள் தமிழர்கள். முன்னதுக்கு மணிகண்டனும், பின்னதுக்கு ரவி.கே. சந்திரனும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
| | |
|
'அழகிய தமிழ்மகன்' ஆங்கிலப்பட தழுவலா?
pj on 11/09/2007 at 4:33am (UTC) | |

எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி வாய்த்த இளைஞனாக விஜய் நடிக்கிறார் என்று செய்தி வெளியானபோதே பல்வேறு சந்தேகங்கள். இதேபோன்ற கதையில் (படம் பெயர் 'ஐயர் தி கிரேட்') மம்முட்டி நடித்துள்ளார்.
ஹாலிவுட்டில் கேட்க வேண்டாம். சமீபத்தில் வெளியான 'Next' படமும் இதே கருவை பின்னணியாகக் கொண்டதே.
லேட்டஸ்டாக 'அழகிய தமிழ்மகன்' 'பைனல் டெஸ்ட்டினேஷன்' படத்தின் தழுவல் என்றொரு தகவல். இந்தப் படத்தின் கதைப்படி, கதாநாயகிக்கு அடுத்து நிகழ இருப்பவை முன்கூட்டியே தெரி்ந்து விடுகிறது. முக்கியமாக மரணம்.
அவளது எச்சரிக்கையினால் அவளது நண்பர்கள் சாலை விபத்தில் பலியாகாமல் தப்பிக்கிறார்கள். ஆனால், மரணம் அவர்களை துரத்துகிறது. ஒவ்வொருவரும் கொடூரமான முறையில் அடுத்தடுத்து பலியாகிறார்கள்.
'பைனல் டெஸ்ட்டினேஷன்' பாப்புலர் ஹாலிவுட் படம். பல பாகங்கள் வெளிவந்து விட்டன. தமிழில் இப்படத்தை எடுக்க சாத்தியமில்லை. இதையே இயக்குனர் ஜீவாவும் கூறியிருக்கிறார். "இது ஜீவா இரண்டரை வருடங்களுக்குமுன் எழுதியது. ஹாலிவுட் படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை" என்றார் பரதன்.
'அழகிய தமிழ்மகனி'ல் வித்தியாசமான ஸ்டைல் ஒன்றை செய்திருக்கிறார் விஜய். அது என்ன என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்வதே சுவாரஸியம்!
| | |
|
|
|
 |
|
|
|
|
01 ஏகன்
02 சேவல்
03 ச-ரோ-ஜா
04 காதலில் விழுந்தேன்
05 சக்கரகட்டி
06 ஜெயம்கொண்டான்
07 பொய் சொல்லப் போறோம்
08 ராமன் தேடிய சீதை
09 துரை
10 தாம் தூம் |
|
01 ஹே சால... -ஏகன்
02 டாக்சி டாக்சி... -சக்கரகட்டி
03 கண்ணம்மா...- சேவல்
04 சஹியே... -தாம் தூம்
05 தோஸ்த் படா... -ச-ரோ-ஜா
06 நான்... -ஜெயம் கொண்டான்
07 மதுர குலு...-சுப்ரமணியபுரம்
08 உலகநாயகனே.... -தசாவதாரம்
09 சுராங்கனி.... -பந்தயம்
10 மழை நின்றா... -ராமன் தேடிய சீதை |
|
|
|
 |
|
|
|
|