|
|
 |
PJMIXPJ.PAGE.TL
அஜித் ரசிகர்களை கவர்ந்த 'கீரிடம்'
pj on 07/23/2007 at 8:21am (UTC) | |

'தல' தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். 'கிரீடம்' பிரமாதமாக வந்திருப்பதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.
சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் சுரேஷ் பாலாஜி தயாரிப்பில் அஜித்-த்ரிஷா நடித்த 'கிரீடம்' தமிழகம் முழுவதும் இன்று
வெளியாகியுள்ளது.
தங்களின் 'தல' படம் வெளியாகும் ஒவ்வொரு தடவையும் அஜித் ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக்கோலமாக்குவது வழக்கம். இன்றும் அந்த கொண்டாட்டத்திற்கு பஞ்சாமில்லாமல் தியேட்டரை கலைக்கட்ட வைத்தனர்.
அஜித்தின் கட்-அவுட்டிற்கு பீரபிஷேகமும், பாலபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை பறைசாற்றிய ரசிகர்கள் படம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு இனிப்புக்களையும் வழங்கினர்.
சென்னை காசி திரையரங்கில் காலை 9 மணி காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் இயக்குனர் விஜய்யை அடையாளம் கண்டுகொண்டு அவரை தோளில் தூக்கி பாராட்டினர். 'தல' படத்தை சூப்பரா டைரக்ஷ்ன் பண்ணியிருக்க தலைவா என அவரை அந்தரத்தில் தூக்கிப்போட்டு பிடித்து எல்லையில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜித் தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அங்கிருந்தபடியே ரசிகர்களின் ரியாக்ஷ்ன்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் அஜித், 'கிரீடம்' ரசிகர்களை திருப்திப்படுத்திய மகிழ்ச்சியில் திளைந்திருக்கிறார்கள்.
| | |
|
ஜீவா உடல் அடக்கம்- கண்ணீரில்திரையுலகம்
PJ on 06/30/2007 at 6:07am (UTC) | |

கடந்த 26-ம் தேதி பீட்டர்ஸ்பர்க் நகரில் மாரடைப்பால் இறந்த ஜீவாவின் உடல் திரையுலகினரின் பிரியாவிடையுடன் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
ரஷ்யாவிலிருந்த ஜீவாவின் உடல் பின்லாந்து கொண்டுவரப்பட்டு பிறகு அங்கிருந்து நேற்று காலை மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்தது. உடலை வாங்க இயக்குனரும் ஜீவாவின் அக்காள் கணவருமான வஸ்ந்த் மும்பையில் காத்திருந்தார்.
பிறகு வேறு விமானம் மூலம் ஜீவாவின் உடல் மதியம் 1.30 மணியளவில் சென்னை வந்தது. பிறகு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டுவரப்பட்டது.
கணவரின் உடலை கண்டதும் ஜீவாவின் மனைவி அனீஸ் கதறி அழுதார். அவரது குழந்தைகள் ஷனா, ஆல்யா அழுதது அனைவரையும் உருக்குவதாக இருந்தது. ஜீவா இறந்தது முதல் அவரது உடல் அருகிலேயே இருந்து சென்னை கொண்டுவர உதவிய ஜெயம் ரவியும் கதறி அழுதார்.
ஜீவாவின் உடலுக்கு இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் நடிகர்கள் சரத்குமார், அர்ஜுன், சிபி, சூர்யா, விக்ரம், பார்த்திபன், ஜெயராம், ஜீவா, பிரசன்னா, லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் உள்பட அனைத்து நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் குஷ்பு, தபு, த்ரிஷா, லிசி, லட்சுமி ராய் ஆகியோரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவில் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு தங்கள் சக தோழனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
இயக்குனர்கள் கே. பாலசந்தர், மணிரத்னம், எஸ்.ஏ. சந்திரசேகரன் என சீனியர்கள் தொடங்கி பிரபு சாலமன், சிவா, வசந்தபாலன் என இன்றைய இளைஞர்கள் வரை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
விக்ரம், ஷாம், ஆர்யா, அசின் ஆகியோர் ஜீவாவின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தனர். மாலை 6 மணி அளவில் ஜீவாவின் உடல் ராயப்பேட்டை கபர்ஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது கதறி அழுத ஜீவாவின் மனைவியை ஆற்றுப்படுத்தினார் அசின்.
திரையுலகினரின், நண்பர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு நல்ல கணவனை, நல்ல தந்தையை, சிறந்த மகனை, திறமையான ஒளிப்பதிவாளரை, புத்திசாலி இயக்குனரை, ஓர் உயிர் நண்பனை இழந்து தவிக்கும் அனைவருக்கும் சினிசவுத் தனது இதயம் கசிந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
| | |
|
பிரபல நடிகர் காதல் திருமணம்
PJ on 06/30/2007 at 6:03am (UTC) | |

காதலா...? சேச்சே அப்படி எதுவுமில்லை என பல்டி அடித்துவிட்டு அடுத்த மாதமே ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து, இவரை பொறந்ததிலிருந்து காதலிக்கிறேன், அடுத்த வாரம் கல்யாணம் என அந்தர் பல்டி அடிக்கும் நடிகர்களே இங்கு அனேகம். இந்த பல்டி பட்டியலில் நரேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மலையாளியான நரேன், தமிழில் அறிமுகமானது 'சித்தரம் பேசுதடி'யில். இவர் நடித்த 'பள்ளிக்கூடம்' விரைவில் வெளிவர இருக்கிறது. மிஷ்கின் இயக்கும் அடுத்தப் படத்திலும் இவர்தான் ஹீரோ.
தமிழில் தடதடவென்று முன்னேறிக் கொண்டிருக்கையில் வந்தது அந்த சேதி. 'நரேன் காதலிக்கிறார்!' செய்தியை பார்த்ததும் பதறிப் போய் அப்படியெல்லாம் இல்லையென பேட்டியளித்தார்.
வருகிற ஆகஸ்டு 22 நரேனுக்கு திருமணம். மணப்பெண்ணின் பெயர் மஞ்சு. இதில் விசேஷம் இதுவொரு காதல் திருமணம். நரேன் - மஞ்சு திருமணம் கேரளாவில் நடக்கிறது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு.
காதலை மறைத்தாலும் காதலியை கரம் பிடிக்கயிருக்கும் நரேனை வாழ்த்துவோம்?
| | |
|
கமல் ஜோடியாக ஸ்ரீதேவி?
PJ on 06/30/2007 at 6:01am (UTC) | |

தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடி என்றால் அது கமல், ஸ்ரீதேவிதான்! இவர்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி இப்படியொரு ஜோடி அமையந்ததில்லை. அழகு, திறமை இரண்டிலும் சென்டம் வாங்கிய ஒரே ஜோடி இது.
இந்த மில்லியனியம் ஸ்டார்ஸ் மீண்டும் இணைந்தால்...?
கேட்கும்போதே குலுமணாலியாக குளுகுளுவென்றிருக்குமே! கோடமபாக்கத்தை சுற்றி வரும் லேட்டஸ்ட் கிசுகிசு இதுதான்.
'தசாவதாரம்' முடிந்த பிறகு பி. வாசு இயக்கத்தில் கமல் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியை வாசு பேசியதாக தகவல். (உண்மை வாசுக்கே வெளிச்சம்).
ஸ்ரீதேவியை பொறுத்தவரை அவர் நடிக்கும் எண்ணத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. சிம்பு, எஸ்.ஜே. சூர்யா என பலர் முயற்சித்தும் மேக்கப் கிட்டை தொடவில்லை இந்த மயிலு. சிம்பு, எஸ்.ஜே. சூர்யா போலவா கமல்? அவர் ஜோடி என்றால் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார்கள்.
இது இப்படியிருக்க பி. வாசு பிஸியாக 'தொட்டால் பூ மலரும்' படத்தை இயக்கிக் கொண்டே ஒரு படத்தில் இவருக்கு அரசியல்வாதி வேடம். ஏ.வி.எம்.மில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.
கமல் தனது இயக்கத்தில் நடிப்பதற்கான பிரதிபலனா இது?
| | |
|
மாதவனின் குழந்தை ராசி
PJ on 06/30/2007 at 5:38am (UTC) | |

இது குடும்ப விஷயம் அல்ல. சுத்தமான சினிமா மேட்டர்.
சீமானின் 'வாழ்த்துக்கள்', 'லீலை', 'எவனோ ஒருவன்' மற்றும் அரைடஜன் இந்தி படங்கள் என மாதவன் பிஸி.
'எதிரி', 'ப்ரியசகி' படங்களுக்குப் பிறகு மீண்டும் 'லீலை'யில் மாதவன், சதா ஜோடி இணைகிறது.
இதுவொரு க்ரைம் த்ரில்லர். இதில் மாதவனின் மனைவியாக வருகிறார் சதா. படத்தில் இவர் நான்கு வயது குழந்தைக்கு அம்மா.
'ப்ரியசகி' படத்திலும் மாதவன், சதா கணவன் மனைவி. அதிலும் சதாவுக்கு ஒரு குழந்தை உண்டு.
மாதவன், சதா காம்பினேஷனில் மட்டுமல்ல இந்த குழந்தை விவகாரம். சங்கீதாவுடன் மாதவன் நடிக்கும் 'எவனோ ஒருவன்' படத்திலும் இருவரும் கணவன் மனைவியாகவே வருகின்றனர். இதிலும் இவர்களுக்கு குழந்தை உள்ளது.
பொதுவாக அம்மா கேரக்டரில் நடிக்க இளம் நடிகைகள் விரும்புவதில்லை. மாதவன் படங்களில் மட்டும் விதிவிலக்கு கேள்வியே கேட்காமல் தாயாகிறார்கள்.
மாதவன் ஜோடி என்பதாலா?
நல்லவேளையாக 'ஆர்யா', 'வாழ்த்துக்கள்'படங்களில் மாதவன் ஜோடியாக வரும் பாவனாவுக்கு கதைப்படி குழந்தைகளில்லை. பாவனாவே ஒரு குழந்தை, அவருக்கு ஒரு குழந்தையா என விட்டுவிட்டார்களோ?
| | |
|
சிறையில் தொடங்கும் 'பழனி'
PJ on 06/30/2007 at 5:33am (UTC) | |

'திருப்பதி','தர்மபுரி' என இரண்டு தோல்விக்குப் பிறகு கமர்ஷியல் வட்டாரத்தில் செல்வாக்கோடுதான் இருக்கிறார் பேரரசு. இவரது அடுத்த சரவெடி 'பழனி' விரைவில் தனது பயணத்தை தொடங்குகிறது.
அதற்குமுன் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் கம்போஸிஸ் நடந்து வருகிறது. வழக்கம் போல பாடலாசிரியர் பேரரசுதான் இதற்கும் பாடல் எழுதுகிறார். அது எப்படிங்கண்ணா நீங்களே பாட்டு கட்டுறீங்க என்று கேட்டால், தெரியலையே... அதுவா வருது என பீஸிங் ஆகிறார்.
பாட்டு எழுதுவது மூலம் வரும் வருமானத்தை வைத்து சொந்த ஊர் மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு சீர் செய்கிறாராம். அதனால் பாடல் சுமாராக இருந்தாலும் ஏன் எழுதறீங்க என்று இவரிடம் கேட்க முடியாது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெருமைக்குரிய விஷயங்களை வரிசைப் படுத்தி 'பழனி'க்கு ஒரு பாட்டு கட்டியிருக்கிறாராம் பேரரசு. ரொம்ப புதுசா இருக்கு என்கிறார்கள் கேட்டவர்கள். (இதே கான்செப்டில் திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு என்று 'சாமி' யிலேயே எழுதியிருந்தாரே நா. முத்துக்குமார். மறந்து விட்டார்களோ?).
வருகிற முப்பதாம் தேதி 'பழனி' படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக சென்னையின் முன்னாள் மத்திய சிறை தயாராகி வருகிறது. ஜெயிலிலிருந்து பரத் வெளியே வரும் காட்சியிலிருந்து தொடங்குகிறதாம் படப்பிடிப்பு.
படத்தில் பரத்துக்கு பன்ச் வசனம் உண்டா என்பதுதான் தெரியவில்லை!
| | |
|
|
|
 |
|
|
|
|
01 ஏகன்
02 சேவல்
03 ச-ரோ-ஜா
04 காதலில் விழுந்தேன்
05 சக்கரகட்டி
06 ஜெயம்கொண்டான்
07 பொய் சொல்லப் போறோம்
08 ராமன் தேடிய சீதை
09 துரை
10 தாம் தூம் |
|
01 ஹே சால... -ஏகன்
02 டாக்சி டாக்சி... -சக்கரகட்டி
03 கண்ணம்மா...- சேவல்
04 சஹியே... -தாம் தூம்
05 தோஸ்த் படா... -ச-ரோ-ஜா
06 நான்... -ஜெயம் கொண்டான்
07 மதுர குலு...-சுப்ரமணியபுரம்
08 உலகநாயகனே.... -தசாவதாரம்
09 சுராங்கனி.... -பந்தயம்
10 மழை நின்றா... -ராமன் தேடிய சீதை |
|
|
|
 |
|
|
|
|