|
|
 |
PJMIXPJ.PAGE.TL
'தசாவதாரம்' படத்துக்கு 1000 பிரிண்டுகள்
pj on 08/01/2007 at 9:27am (UTC) | |

நாளுக்கு நாள் டாடா டைட்டானியம் கம்பெனியாக எதிர்ப்பார்ப்பு ஏறி வருகிறது. ஐம்பது கோடி, எண்பது கோடி என ஆளாளுக்கு ஒரு பட்ஜெட் சொல்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகயிருக்கும் 'தசாவதாரம்' படத்துக்குதான் இத்தனை எதிர்பார்ப்பு.
படத்தின் கதை குறித்தும், கமலின் பத்து கேரக்டர்கள் குறித்தும் இருநூறு பக்க நோட் அளவுக்கு செய்திகள் வந்துவிட்டாலும் கமலுக்கும், கே. எஸ். ரவிக்குமாருக்கும் மட்டுமே உண்மை தெரியும் என்பதே உண்மை.
படத்தில் எக்கச்சக்க கிராபிக்ஸ் காட்சிகள். இதனால் நான்கு கம்பெனிகளுக்கு வேலைகளை பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டு சென்னையில், இரண்டு மும்பையில்.
ரிலீஸாவதால் மொத்தமாக ஆயிரம் பிரிண்டுகள் போட திட்டமிட்டுள்ளனர். படத்தை குறித்து கமல், கே. எஸ். ரவிக்குமாரைவிட கான்பிடன்டாக இருப்பவர் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
'டைட்டானிக்' படம் மாதிரி இந்தப் படமும் உலகத்திலுள்ள எல்லா ரசிகர்களுக்கும் புரியும், புரிவது மட்டுமின்றி பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சரி, போட்ட பணம் கிடைக்குமா?
ரவிச்சந்திரனின் கணிப்புப்படி முந்நூறு கோடிவரை படம் வசூலிக்குமாம்.
ஓவர் கான்பிடடென்ட்?
| | |
|
'கிரீடம்' கிளைமாக்ஸில் மாற்றம்!
pj on 07/30/2007 at 4:14pm (UTC) | |

யதார்த்தமான படத்தை எடுத்ததற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள் அஜித்தும், இயக்குனர் விஜய்யும். ஆனால், இந்த யதார்த்தமே ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
படத்தின் இறுதியில் அஜித் வில்லனை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போகிறார். இந்த சோக முடிவை ரசிகர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் மதுரையில் உள்ள சில திரையரங்குகளில் தொய்வான சில காட்சிகளை எடிட் செய்து, கிளைமாக்ஸிலும் சில மாற்றங்கள் செய்து திரையிட்டனர். தயாரிப்பாளரின் அனுமதியில்லாமலே திரையரங்கு ஆபரேட்டர்களே இந்த வெட்டல் ஒட்டல் வேலையை செய்தனர்.
விமர்சகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிரீடத்தின் கிளைமாக்ஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது சோக முடிவை மாற்றி மகிழ்ச்சியான முடிவை புதிதாக சேர்த்துள்ளனர்.
கே.பாலாஜி தயாரித்த 'தீபம்', 'வாழ்வே மாயம்', 'தீ' படங்களின் முடிவுகளும் சோகமானதுதான். பலர் அதனை மாற்றக் கோரியும் பிடிவாதமாக அதனை மறுத்தார் கே. பாலாஜி. அந்தப் படங்களும் சூப்பர் ஹிட்டாயின.
முதல்முறையாக தனது மகன் சுரேஷ் பாலாஜியின் வேண்டுகோளை ஏற்று 'கிரீடம்' படத்தின் கிளைமாக்ஸை மாற்ற சம்மத்துள்ள்ளார் கே. பாலாஜி.
இந்த மாற்றம் ஆரோக்கியமானதா? இல்லை ஹீரோயிஸத்துக்கு ஆதரவானதா?
விமர்சகர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.
| | |
|
ரஜினி காரில் தனுஷின் சவாரி
pj on 07/29/2007 at 4:46am (UTC) | |

ஓட்டை காலனாவோ, ஓட்டை காரோ ரஜினி பயன்படுத்தியது என்றால் அதன் மதிப்பே தனிதான். எப்போதோ ரஜினி ஓட்டிய பழைய காரில் தனுஷ் சவாரி செய்துள்ளார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றி மாறன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பொல்லாதவன்.' தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கெளரிமுன்ஜல் நடிக்கிறார்.
தொடர்ந்து தனது படங்களில் ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு நடனமாடும் தனுஷ் இந்த படத்திலும் தனது மாமனார் ரஜினி பாடி நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெறும் 'எங்கேயும் எப்போதும்....' பாடலுக்கு நடனமாடுகிறார்.
இந்த பாடல்காட்சிக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வித்தியாசமான ஏழு செட்டுகள் போடப்பட்டு படமாக்கப்பட்டது. பழைய பாடலை பாடிய S. P. பாலசுப்ரமணியனே ரீமிக்ஸ் பாடலையும் பாடியுள்ளார்.
படத்தில் இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினி பயன்படுத்திய அதே காரையே இந்த படத்திலும் தனுஷ் பயன்படுத்தியிருக்கிறார்.
| | |
|
'கிரீடம்' படத்துக்குதிட்டமிட்டுபிரச்சனை
pj on 07/29/2007 at 4:41am (UTC) | |

'கிரீடம்' படம் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் நெகடிவ்வான எண்ணம் உருவாக்க சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக அஜித் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. | | |
|
விஜய் படத்துக்கு கிரீன் சிக்னல்
pj on 07/29/2007 at 4:40am (UTC) | |

கனகரத்னா மூவிஸ் மற்றும் விஜய் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று இணையதள கூட்டமைப்பு போட்ட தடை தளர்த்தப்பட்டது.
கனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் 'போக்கிரி.' விஜய்-அசின் நடித்து வெளிவந்த இப்படத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு இணையதளங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காமல் செய்தி சேகரிக்கும் உரிமைக்கு தடையாக இருப்பதாக கனகரத்னா மூவிஸ் மற்றும் விஜய் தரப்புமீது இணையதள அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதனையடுத்து இனி கனகரத்னா மூவிஸ் தயாரிக்கும் படங்கள் மற்றும் விஜய் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளையோ, புகைப்படங்களையோ பிரசுரிப்பது இல்லை என இணையதளங்கள் முடிவு செய்தன.
இந்த தடை கடந்த சில நாட்களாக செயலாக்கத்தில் இருந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு சமீபத்தில் நம்நாடு படத்தின் பிரஸ்மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது இணையதள நிருபர்களை அழைத்த ரமேஷ்பாபு 'போக்கிரி' படவிழாவில் அழைக்கப்படாமல் இருந்த சம்பவத்திற்காக ஒவ்வொரு இணையதள நிருபர்களிடமும் தனித்தனியாக வருத்தம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது பட நிறுவனம் தயாரிக்குகம் படங்களுக்கு இனி தொடர்ந்து ஆதரவு தருவது என்று முடிவுசெய்யப்பட்டு, போடப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டது.
| | |
|
'கிரீடம்' - பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!
pj on 07/23/2007 at 8:24am (UTC) | |

எத்தனை நாளாயிற்று அஜித்தை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்த்து. கதையை சரியாக தேர்நதெடுத்தால் 'தல'யை அடிக்க ஆளில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறது 'கிரீடம்.
ஏ,பி,சி மற்றும் மல்டி பிளிக்ஸ் என அனைத்து இடங்களிலும் நூறு சதவீத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது அஜித்தின் புதிய படமான 'கிரீடம்.' "தோல்விகள், நீண்ட இடைவெளிகள் இவற்றிற்குப் பிறகும் இவ்வளவு பெரிய ஓபனிங் அஜித்துக்கு இருப்பது ஓர் அதிசயம்" என்றார் சென்னை திரையரங்கு உரிமையாளர் ஒருவர்.
அஜித் படத்துக்கு பதினெட்டு கோடி ரூபாய் வியாபாரம் கேரண்டி என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம். இந்த வருடம் 'சிவாஜி'க்கு அடுத்து மிகப் பெரிய ஓபனிங் 'கிரீடம்' படத்திற்குதான். படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று ரெவ்னியூ சொல்கிறது.
விமர்சகர்களின் பாராட்டுகளையும் படம் பெற்றுள்ளது. இடைவேளைக்கு பின்வரும் சென்ட்மெண்ட் காட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து அம்சங்களும் பாராட்டுக்குரியவை என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஹீரோயிஸத்தை குறைத்து, கதைக்கு உண்மையாக இருந்தாலே ஒரு படத்தை வெற்றபெற வைக்க முடியும் என 'கிரீடம்' மூலம் புதுரூட் சொல்லியிருக்கிறார் அஜித். மற்றவர்களும் இதனை பின்பற்றலாம்!
| | |
|
|
|
 |
|
|
|
|
01 ஏகன்
02 சேவல்
03 ச-ரோ-ஜா
04 காதலில் விழுந்தேன்
05 சக்கரகட்டி
06 ஜெயம்கொண்டான்
07 பொய் சொல்லப் போறோம்
08 ராமன் தேடிய சீதை
09 துரை
10 தாம் தூம் |
|
01 ஹே சால... -ஏகன்
02 டாக்சி டாக்சி... -சக்கரகட்டி
03 கண்ணம்மா...- சேவல்
04 சஹியே... -தாம் தூம்
05 தோஸ்த் படா... -ச-ரோ-ஜா
06 நான்... -ஜெயம் கொண்டான்
07 மதுர குலு...-சுப்ரமணியபுரம்
08 உலகநாயகனே.... -தசாவதாரம்
09 சுராங்கனி.... -பந்தயம்
10 மழை நின்றா... -ராமன் தேடிய சீதை |
|
|
|
 |
|
|
|
|