|
|
 |
PJMIXPJ.PAGE.TL
ஸ்ரீகாந்தை போலீஸ் தேடுகிறது
pj on 06/16/2007 at 1:03pm (UTC) | |

திருமண விவகாரம் ஸ்ரீகாந்தை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
நடிகர் ஸ்ரீகாந்துக்கும் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையே வந்தனாவின் சகோதரர் மீது மோசடி புகார்கள் இருப்பதாக செய்திகள் வெளியானதால் ஸ்ரீகாந்தின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். ஆனாலும் ஸ்ரீகாந்துடன்தான் வாழ்வேன் என வந்தனா பிடிவாதமாக கூறிவந்தார்.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு திடீரென பெற்றோருடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்த வந்தனா அங்கேயே தங்கப் போவதாக கூறினார். தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் ஆந்திராவில் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாக கூறி அதற்கான போட்டோ ஆதாரங்களையும் பத்திரிகையாளர்களிடம் நேற்று வந்தனா காட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மாலையே நிருபர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் 'வந்தனாவுடன் பதிவுத் திருமணம் நடந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை' என்றார்.
இதைத் தொடர்ந்து வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வந்தனா ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் 'எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்தது. எங்கள் திருமணத்துக்கு ஸ்ரீகாந்தின் பெற்றோர் வரவில்லை. இதனால் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது இதன்பின் ஸ்ரீகாந்தின் பெற்றோர் என்னை தட்டி கழித்தனர். என் கணவருடன் என்னை சேர்தது வைக்கவேண்டும்' என்று கூறியிருந்தார். அதற்கு ஆதாரமாக திருமண வீடியோ மற்றும் போட்டோக்களை போலீசில் கொடுத்தார்.
இதையடுத்து வடபழனி அனைத்து மகளிர் நிலைய சப்-இன்ஸ்பெக்ட்ர் வயலாபாய், வந்தனாவை அழைத்து விசாரித்தார். அப்போது தனது வாக்குமூலத்தில் வந்தனா கூறியதாவது:
ஸ்ரீகாந்துக்கு என் மீது கொள்ளைப் பிரியம். இதனால், அவரது பெற்றோரிடம் சொல்லாமல் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள ஒரு வீட்டில் முதலிரவு நடந்தது. திருமண விஷயம் தெரியவந்ததும் என்னை அவரிடம் இருந்து பிரிக்க ஸ்ரீகாந்தின் பெற்றோர் சதி செய்தனர்.
வேறு வழி தெரியாமல்தான் ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் குடியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவரை பழிவாங்கும் எண்ணம் கிடையாது. ஸ்ரீகாந்தை என்னுடன் சேர்த்து வைத்தால்போதும். என்னுடன் வாழ அவர் விருப்பமாக இருக்கிறார். ஆனால், பெற்றோருக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சென்னையில் உள்ள எங்கள் வீட்டில்தான் ஸ்ரீகாந்த தங்குவார். அப்போது ஒரே அறையில் இருவரும் படுத்திருப்போம். கர்ப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி வந்தோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் வந்தனா கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். தங்கியிருந்த ஓட்டல் அறையையும் காலி செய்துவிட்டார். அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது நண்பர்களின் வீடுகளில் விசாரித்தபோதும் எந்த விவரமும் தெரியவில்லை.
ஸ்ரீகாந்தை விசாரணைக்கு அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற அவரது வக்கீலும் திரும்பி வரவில்லை. அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்றும் தெரியவில்லை. ஸ்ரீகாந்தை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
| | |
|
சிபி நடிக்கும் 'காத்தவராயன்'
pj on 06/16/2007 at 12:53pm (UTC) | |

கதை பஞ்சத்தைவிட பெயர் பஞ்சம் அதிகம் இருக்கும்போல. ஏற்கனவே பலமுறை பயன்படுத்திய பெயர்களையே புதிய படங்களுக்கு வைக்கிறார்கள்.
அந்நாள் சூப்பர் ஸ்டாரான பி.யூ. சின்னப்பா நடித்து 'காத்தவராயன்' என்றொரு படம் வந்தது. பிறகு சிவாஜி நடித்த படம் ஒன்றிற்கு 'காத்தவராயன்' என்று பெயர் வைத்தனர்.
இப்படி இரண்டுமுறை பயன்படுத்தப்பட்ட காத்தவராயன் மூன்றாவது முறையும் உயிர் பெற்றிருக்கிறான். உபயம் சலங்கை துரை. தெலுங்கு 'டி' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய இவர் இயக்கும் புதிய படத்தின் பெயர் 'காத்தவராயன்.'
'லீ' படத்துக்காக வளர்த்த தாடி மீசையை எடுத்து, படு ஸ்மார்ட்டாக அடுத்த உறுமீனுக்காக காத்திருக்கும் சிபிதான் புதிய 'காத்தவராயனின்' ஹீரோ.
நல்ல சப்ஜெக்டில் மட்டுமே இனி நடிப்பேன் என சபதமெடுத்திருக்கும் சிபி அடுத்து நடிக்கப் போகும் படம் என்பதால் 'காத்தவராயனி'டம் நல்ல விஷயங்களை எதிர்பார்க்கலாம்.
சிபிக்கு ஜோடி தேடும் படலம் தற்போது நடந்து வருகிறது!
| | |
|
வடிவேலு ஜோடி லண்டன் மாடல்
pj on 06/15/2007 at 6:38am (UTC) | |

மனுஷனுக்கு பிரம்மா மச்சத்தில் உடம்பை செய்திருப்பார் போல. 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' யில் இரண்டு இளம் ஹீரோயின்களுடன் ('இளம்' ரொம்ப முக்கியம்) டூயட் பாடியவர் அடுத்து ஆட இருப்பது ஒரு மாடலுடன். பெயர் தீதா சர்மா.
இம்சை அரசன் வெற்றியைத் தொடர்ந்து 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு. இதில் இவரது ஜோடியாக நடிக்க சிம்ரனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. சிம்ரனும் இந்த ஆஃபரை ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வந்தன. இந்த செய்தியை மறுத்த சிம்ரன் வடிவேலு ஜோடியாக நடிக்கவில்லை என்றார்.
பிறகு பாலிவுட்டின் ஷில்பா ஷெட்டியை வடிவேலின் ஜோடியாக்க முயன்றனர். ஷில்பாவின் நல்ல நேரம், பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் உலக பிரசித்திப் பெற்று உட்கார நேரமின்றி ஊர் சுற்றி வருகிறார்.
மூன்றாவது முயற்சியாக வடிவேலுக்கு தகைந்தவர் தீதா சர்மா. இவரொரு மாடல். லண்டனை சேர்ந்தவர் என்கின்றன தகவல்கள்.
செவன்த் சானல் மாணிக்கம் நாராயணன் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தை தயாரிக்கிறார். தம்பி ராமையா இயக்கும் இந்தப் படத்தின் பாதி கதை இந்திரலோகத்திலும் மீதி கதை இந்த உலகத்திலும் நடக்கிறது.
இந்திரலோகம் கலை இயக்குனர் தோட்டாதரணி கைவண்ணத்தில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தயாராகி வருகிறது. அரங்க அமைப்புக்கு மட்டும் மூன்று கோடிவரை செலவழிக்க இருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.
இம்சை அரசனின் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவாரா இந்திரலோகத்து அழகப்பன்? நடத்தினால் தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஒரு காமெடியன். வரவு இன்னொரு ஹீரோ!
| | |
|
அகதிகளை அழ வைத்த 'ராமேஸ்வரம்'
PJ on 06/13/2007 at 5:46pm (UTC) | |

"உலக பிரசித்த பெற்று... காலம் கடந்து நிற்கும் மறக்க முடியாத எல்லா திரைப்படங்களுமே.. காதலை மையமாகக் கொண்டு மனித வாழ்வினை பதிவு செய்யப்பட்டதே...
ராமேஸ்வரமும் இந்த வகையைச் சார்ந்தவையே... சிவாநந்த ராசா என்ற ஜீவனுக்கும் (ஜீவா) வசந்தி என்ற (பாவனா) பெண்ணுக்கும் ஏற்படும் காதலே கரு." 'ராமேஸ்வரம்' கதைப்பற்றி அழகாக விவரிக்கிறார் இயக்குனர் செல்வன். பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள இவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ITA Films சார்பில் S.N. ராஜா தயாரிக்கிறார்.
ஜீவாவிற்கு கெட்டப் மாற்றம் இருக்கிறதா?
வேகமும், வேதனையும் கொண்ட முகம், வரண்ட உதடுகள்... அனல் கக்கும்பார்வை... இதுதான் ஜீவா...! ஒரு அகதி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். பேச்சும், நடையும் மிரட்சியடைய வைக்கும். மனது முழுவதும் நெருப்பை அடைகாக்கும் இளைஞன் தாத்தாவின் அன்பை தவிர்க்க இயலாது அகதியாக ராமேஸ்வரம் வருகிறான். எல்லோராலும் அன்பு செய்யப்பட்டு சந்தோசம் மட்டுமே கிடைக்கப் பெற்ற வசந்தியின் இரக்கம் ஜீவன் மீது காதலை ஏற்படுத்துகிறது.
ஆயிரம் உண்மையான அகதிகளை பத்து நாட்கள் நடிக்க வைத்திருக்கிறோம். எல்லாத்தையும் இழந்து அகதிகளாக இந்தியா வரும் ஒரு காட்சியில் உண்மையான அகதிகள் கதறி அழுதுவிட்டார்கள்.
ராமேஸ்வரத்திற்கு பிறகு... ஜீவா உலகத் தமிழர்களின் வீட்டுப் பிள்ளையாகி விடுவார் என்பதில் சந்தேமே இல்லை. வலியையும், ஆதங்கத்தையும் சமூக கோபத்தையும் இத்தனை அழகாக ஜீவா தனது முகபாவத்தில் காட்டுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க இயலாது
சுட்டித்தனமும், அன்பும் கொண்ட பெண்ணாக பாவனா பிரமாதப்படுத்தியிருக்கிறார். அகதிப் பெரியவராக வரும் மணிவண்ணன் பாரம்பரியம் கொண்ட பெரிய மனிதராக லால், இன்ஸ்பெக்டராக போஸ் வெங்கட், அகதிகளாக வரும் டான்ஸ் மாஸ்டர் சாந்தி, சம்பத்... மற்றும் அத்தனை பேரும் கதாபாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
வாலி நோக்கம் என்ற ஊரில் உடைப்பதற்காக காத்திருக்கும் கப்பல். பிரிட்டிஷ் காலத்து கப்பல் கட்டும் துறைமுகம் (Goldern Rock), ராமர் பாதம், கோதண்டராமர் கோவில், தனுஷ் கோடி, தாவங்காடு கடற்கரை... இப்படி பல இடங்களும் பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றன... இராமேஸ்வரத்தில்! போர் பின்னணி காட்சிகள் கம்போடியாவில் படமாக்கப்படவுள்ளது.
| | |
|
சிவாஜி'யை முறியடித்தது 'தசாவதாரம்'
PJ on 06/12/2007 at 5:17pm (UTC) | |

'சிவாஜி' க்கு சவால் தொடங்கிவிட்டது. பட்ஜெட் முதல் டிக்கெட் கலெக்ஷ்ன் வரை 'சிவாஜி'க்கு சிம்ம சொப்பனமாக தயாராகி வருகிறது கமலின் 'தசாவதாரம்.' | | |
|
கோடம்பாக்கத்தை நடுங்கவைக்கும் 'சிவாஜி'
pj on 06/11/2007 at 8:24am (UTC) | |

டைனோசரை பார்த்து அனில் குட்டிகள் பயப்படும் நிலைதான் கோடம்பாக்கத்தில் தற்போது நிலவும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு, ஷங்கரின் இயக்கம், ஏ.வி.எம்மின் தயாரிப்பு என 'சிவாஜி' க்கு பூஜை போட்டபோதே அதன் பிரம்மாண்டம் பார்த்து மிரள ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம்.
'சிவாஜி' ரிலீஸ் வரை தங்களது ப்ராஜக்டை தள்ளிப்போட ஆரம்பித்த பட நிறுவனங்கள் பல உண்டு. இரண்டு மாதத்திற்கு முன்பே 'சிவாஜி' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட, அப்போது ரிலீஸாக வேண்டிய சின்ன பட்ஜெட் படங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் 'சிவாஜி' எப்போது ரிலீஸாகும் என்பது தயாரிப்பு நிறுவனத்துக்கே தெரியாமல் இருக்க, கிடைத்த கேப்பில் வெளியான சிறு முதலீட்டு படங்கள் சிலவும் இருக்கின்றன.
படத்தை வெளியிட தயங்குவது மட்டுமின்றி 'சிவாஜி' ரிலீஸ் நேரத்தில் படபூஜை, பாடல் வெளியீட்டு விழா என நிகழ்ச்சிகள் நடத்த கூட பயந்த பட நிறுவனங்கள் கணக்கிலடங்கா ஒருவழியாக 15-ந் தேதி 'சிவாஜி' ரிலீஸாவது உறுதியாக கோடம்பாக்கத்தில் நடந்துக்கொண்டிருந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமும் பிரஸ்மீட்டுகள், சினிமா நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இருக்கும் கோடம்பாக்கத்தில் கடந்த பத்து நாட்களாக பந்த் நடக்கும் அமைதி.
இதற்கெல்லாம் காரணம் 'சிவாஜி' ரிலீஸ் நேரத்தில் தங்கள் படத்தின் செய்தி, கிணற்றில் போட்ட கல்லாகிவிடும் என்ற பயம்தான்.
எது எப்படியோ 15-ந் தேதிக்கு பிறகு கோடம்பாக்கம் மீண்டும் விழாக்கோலம் கண்டுவிடும்.
| | |
|
|
|
 |
|
|
|
|
01 ஏகன்
02 சேவல்
03 ச-ரோ-ஜா
04 காதலில் விழுந்தேன்
05 சக்கரகட்டி
06 ஜெயம்கொண்டான்
07 பொய் சொல்லப் போறோம்
08 ராமன் தேடிய சீதை
09 துரை
10 தாம் தூம் |
|
01 ஹே சால... -ஏகன்
02 டாக்சி டாக்சி... -சக்கரகட்டி
03 கண்ணம்மா...- சேவல்
04 சஹியே... -தாம் தூம்
05 தோஸ்த் படா... -ச-ரோ-ஜா
06 நான்... -ஜெயம் கொண்டான்
07 மதுர குலு...-சுப்ரமணியபுரம்
08 உலகநாயகனே.... -தசாவதாரம்
09 சுராங்கனி.... -பந்தயம்
10 மழை நின்றா... -ராமன் தேடிய சீதை |
|
|
|
 |
|
|
|
|